search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மொழி பூங்கா"

    சென்னையில் செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடர்ந்து செயல்படலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    கடந்த 2010-ம் ஆண்டு சென்னை கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்கா அமைந்திருந்த இடத்தில் ஏற்கனவே பிரபல தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வந்தது. அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த இடத்தின் சொந்தக்காரர் வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2008-ம் ஆண்டில் தள்ளுபடி செய்தது.

    இதனை தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, தினேஷ் மகேஷ்வரி அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘சென்னையில் செம்மொழி பூங்கா தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்க வேண்டும். அந்த பூங்கா தொடர்ந்து செயல்படலாம்’ என்று உத்தரவிட்டு நில உரிமையாளரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt
    ×